ஜிவி பிரகாஷ் படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம், அன்னூரைச் சார்ந்த அருண்பிரசாத் மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம்உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஜிவி பிரகாஷை வைத்து 4ஜி என்றபடத்தை இயக்கியுள்ளார்.
இவரின் மறைவிற்கு இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “என்னுடைய முன்னாள் உதவியாளரும், இளம் இயக்குனருமான அருணின் திடீர் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்போதும் இனிமையானவர், நேர்மறையானவர், கடின உழைப்பாளி. உங்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைதெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.