shankar celebrate 30 years of gentleman

அர்ஜுன், மதுபாலா, நம்பியார், மனோரம்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான படம் ஜென்டில்மேன். குஞ்சுமோன் தயாரித்திருந்த இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படம் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார். ஏ.ஆர் ரஹ்மான். இசையமைத்திருந்த இப்படத்தின்பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisment

இப்படம் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் ஷங்கர் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள். இதோடு 30 ஆண்டுகளை கடந்து முன்னணி இயக்குநராக இருக்கும் ஷங்கருக்கு பலர் வாழ்த்துகளைத்தெரிவித்தனர்.

Advertisment

ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2', ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இதனிடையே தயாரிப்பாளர் குஞ்சுமோன், ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தைத்தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.