style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'2.O' படத்தை முடித்த கையோடு இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக 'இந்தியன் 2' படத்தை இயக்கவுள்ளார். இதற்கிடையே இப்படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கும் நடிகர் கமல்ஹாசன் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்றோடு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் முடிவுக்கு வந்ததால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என இயக்குனர் ஷங்கர் தற்போது அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு ஷங்கர் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... 'இந்தியன் 2' படத்தின் மொத்த ஸ்கிரிப்ட்டும் தயாராகவுள்ளதாகவும், படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.