/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/296_22.jpg)
இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஷங்கர் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, தனது அடுத்த படம் வேள்பாரி தான் எனவும், அதற்கான திரைக்கதையை கரோனா காலகட்டத்திலே எழுதி முடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படத்தை முடித்து விட்டு அதன் அடுத்த பாகமான இந்தியன் 3 பட போஸ்ட் புரொடைக்ஷன் பணிகளையும் கவனித்து வருகிறார்.
முன்னதாக இப்படத்தை அடுத்து மதுரை எம்.பி. மற்றும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய பிரபல நாவலான 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை படமாக்க முயற்சி எடுத்தார். அதற்காக அதன் உரிமையையும் வாங்கினார். இப்படத்தில் சூர்யா நடிப்பதாகவும் பின்பு ரன்வீர் சிங் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதன் பிரகு எந்த அப்டேட்டும் வரவில்லை. இடையில் ரன்வீர் சிங்கை வைத்து முன்பு கமிட்டான அந்நியன் பட இந்தி ரீமேக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அவர் எந்த படத்தை அடுத்து எடுக்கவுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கிடைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)