தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குனரின் பெயரை சொல்லுங்கள் என்றால் அனைவரும் யோசிக்காமல் சொல்லும் பெயர் ஷங்கர்தான். இயக்குனர் எஸ்.ஏ.சி இன் துணை இயக்குனராக இருந்து, பின்னர் அர்ஜுனை வைத்து ஜெண்டில் மேன் என்றொரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் ஷங்கர். ஜெண்டில் மேன் மாபெரும் ஹிட்டை தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தொழில்நுட்ப வசதிகளை உயர்த்தி தமிழ் படங்களையும் ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்த முயற்சி செய்ய முற்பட்டவர்களில் இவரும் ஒருவர். இந்திய சினிமாவில் கிராஃபிக்ஸ்

ஷங்கர் தமிழ் சினிமாவில் கால் பதித்து நடக்க ஆரம்பித்து 25 வருடங்கள் ஆகியிருக்கிறது. இதை முன்னிட்டு தமிழ் திரையுலகத்தின் முக்கிய இயக்குனர்களான மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், மோகன் ராஜா, லிங்குசாமி, பா.ரஞ்சித், அட்லீ, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், பாண்டியராஜ், சசி உள்ளிட்டோர் கலந்துகொண்ட சந்திப்பு நேற்று மாலை நிகழ்ந்திருக்கிறது. ஷங்கரின் 25 வருட திரையுலக பயணத்தை பாராட்டும் விதமாக இயக்குனர் மிஷ்கின் இந்த சந்திப்பை அவரது அலுவலகத்தில் ஒருங்கிணைத்திருந்தார். கலந்துகொண்ட இயக்குனர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிகழ்வில் கௌதம் வாசுதேவ் மேனன், ‘உறவுகள் தொடர்கதை’ பாடலை பாடி மற்றவர்களை மகிழ்வித்தார். அவள் அப்படித்தான் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை வாரணம் ஆயிரம் படத்திலும் கௌதம் பயன்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து தற்போது ‘தர்பார்’படத்தை மும்பையில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று ட்விட்டரில் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.