வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஷமீரா ரெட்டி. சமீபத்தில்தான் குழந்தைக்கு தயானார் ஷமீரா ரெட்டி. பலரும் அவருடைய தாய்தன்மையை கலாய்க்கும் வகையில் இணையத்தில் கிண்டலடித்து வந்ததாக அண்மையில் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் யாராலும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த தனிமைப்படுத்துதலில் போர் அடிக்காமல் இருக்க ஷமீரா ரெட்டி இன்ஸ்டாவில் சமையல் குறிப்புகள் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் இது ஷமீரா ரெட்டியா என்று தோனும் அளவிற்கு மாறிவிட்டார். தலைமுடியில் நரை, முகத்தில் முதிர்ச்சி என்று முற்றிலும் வித்தியாசமாக மாறிவிட்டார் ஷமீரா ரெட்டி. அந்த வீடியோவை தொடங்கும் முன்பே நீங்கள் என் நரைமுடி குறித்து கிண்டலடித்தால் எனக்கு கவலையில்லை என்று கூறி, சமையல் குறிப்புகள் பற்றி தெரிவித்துள்ளார்.