டிஸ்னி+ஹாட்ஸ்டார்நிறுவனம், இயக்குநர் ஶ்ரீதர்.கே இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிஸான 'பாராசூட்' சீரிஸை அறிவித்துள்ளது. நடிகர் கிருஷ்ணாதயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும்.
ஷாம், கிஷோர் மற்றும் நடிகை கனி ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களோடு குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் பிரபல நடிகர்கள் விடிவி கணேஷ், பாவாசெல்லதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.