
விஸ்வாசம் படத்தின் சிறப்புக் காட்சியை அஜித்தின் மனைவி ஷாலினி பார்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் சிவா, நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாகிறது.
அஜித் நடித்த படங்களை அவரது மனைவி ஷாலினி ரசிகர்களுடன் சேர்ந்து ஆல்பர்ட் தியேட்டரில் பார்ப்பார் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், இந்த முறை விஸ்வாசம் படத்தை படக்குழுவுடன் அவர் பார்த்து ரசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரீவியூ தியேட்டரில் நேற்று ஸ்பெஷல் ஷோ பார்த்திருக்கிறார். இது மெல்ல வெளியே தெரியவர அஜித் ரசிகர்கள் அஜித் வந்திருப்பார் என்று தியேட்டருக்கு வந்துள்ளனர். ஆனால், அஜித் வராததால் ஷாலினியுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.