Advertisment

"மச்சான்...இது உனக்காக" - ஜி.வி. பிரகாஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை

shalini pandey dance for gv prakash song

Advertisment

'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கதாநாயகனாக சீனுராமசாமியின் 'இடி முழக்கம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கெளதம் மேனனுடன் இணைந்து'13' என்றபடத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியானது.

மேலும் இசையமைப்பாளராக சூர்யாவின் 'வணங்கான்', 'வாடிவாசல்' மற்றும் தனுஷின் 'கேப்டன் மில்லர்', விஷாலின் 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் இசையில் கடந்த 21ஆம் தேதி வெளியான 'சர்தார்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரது இசைக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே, தனது சமூக வலைதள பக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் பாடலுக்கு காரில் உட்கார்ந்தபடி நடனமாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்தவீடியோவில் ஜி.வி. பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்' படத்தில் வரும் 'ஒத்த சொல்லால' பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்து, "மச்சான்...இது உனக்காக" என்று குறிப்பிட்டு ஜி.வி. பிரகாஷை டேக் செய்துள்ளார்.

Advertisment

இந்த பதிவிற்கு ஜி.வி. பிரகாஷ் லைக் செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷும் நடிகை ஷாலினி பாண்டேவும் இணைந்து '100% காதல்' என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழுக்கு அவர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

shalinipandey GV prakash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe