shalini pandey about his bad experience

தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அப்படம் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, தமிழில் ஜி.வி.பிரகாஷூடன் ‘100% காதல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஷாலினி பாண்டே அடுத்து ஜீவாவுடன் ’கொரில்லா’ படத்தில் நடித்தார். இரண்டு படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்த சூழலில் ஷாலினி பாண்டே தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “எனது கரியரின் ஆரம்பக் கட்டத்தில் ஒரு தென்னிந்தியப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது கேரவனில் நான் உடை மாற்றிக் கொண்டிருந்த போது படத்தின் இயக்குநர் கதவை தட்டாமல் என் ரூமில் நுழைந்துவிட்டார். அவரை பார்த்ததும் எனக்கு செய்வதென்றே தெரியவில்லை. உடனே கத்திவிட்டேன். அப்போது எனக்கு வயது 22தான்.

Advertisment

அந்த இயக்குநர் வெளியே போனதும் அனைவரும் என்னிடம் நீ அப்படி கத்தியிருக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் நாகரிகம் என்பது எல்லாரிடமும் இருக்க வேண்டும். கதவைத் தட்டாமல் நுழைந்தது நாகரிகமற்ற செயல். அதனால் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள சில விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இப்போது இது போன்ற விஷயங்களை எப்படிக் கையாள்வது என்பதை கற்றுக் கொண்டேன்” என்றார்.