shalini ajithkumar said she is not in twitter

80-களில் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஷாலினி, தமிழில் விஜய்யின் 'காதலுக்கு மரியாதை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான 'அமர்க்களம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அஜித்துக்கும் ஷாலினிக்கு இடையே காதல் மலர இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு படங்களில் இருந்து விலகிய ஷாலினி பூப்பந்து விளையாட்டு நன்றாக விளையாடுவார் என்பது அனைவரும் அறிந்தது. அதோடு சட்டப் படிப்பும் முடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Advertisment

கடந்த 2022ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாக்ராமில் இணைந்தார். அதில் தொடர்ச்சியாக அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து வந்தார். கடைசியாககடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, அவரது 24வது கல்யாண நாளை முன்னிட்டு அஜித்துடன் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

Advertisment

இன்ஸ்டாகிராமை தொடர்ந்து எக்ஸ் வலைதளத்தில் ஷாலினி அஜித்குமார் பெயரில் ஒரு அக்கவுண்ட் இயங்கி வந்தது. இதுவும் ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்த அதே வருடமான 2022ல் அக்டோபர் மாதம் தொடங்கபட்டுள்ளது. ஆனால் அது போலி அக்கவுண்ட் என ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அக்கவுண்டை தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம் எனவும் யாரும் பின்தொடர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment