Skip to main content

“குறைபாடான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுள்ளது” -சர்ச்சைக்கு சக்திமான் நடிகர் விளக்கம்!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

shaktiman

 

 

90களில் பிறந்து சிறுவர்களாக வளர்ந்தவர்களுக்கு சக்திமான் தொடர் என்பது தற்போதைய மார்வெல் டிசி சூப்பர் ஹீரோ படங்கள் போன்றது. பலருக்கும் பிடித்தமான சக்திமான் ஏற்படுத்திய தாக்கம் எண்ணிலடங்காதவை. இந்நிலையில் சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த முகேஷ் கண்ணா பெண்கள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

பெண்கள் தங்களுக்கு முன்பு நடந்த பாலியல் ரீதியலான பிரச்சனைகளை வெளியில் சொல்லி குற்றச்சாட்டு வைப்பதுதான் மீடூ இயக்கம். இது ஹாலிவுட்டில் தொடங்கி படிப்படியாக பாலிவுட், கோலிவுட் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் குறித்து பேசுகையில், “பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீ டூ பிரச்சனை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்று கருத்துக் கூறியிருந்தார்.

 

இவரின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் மிகப்பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முகேஷ் கண்ணா இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய பேச்சு மிகவும் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. மேலும் முற்றிலும் குறைபாடான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுள்ளது. நான் பெண்களுக்கு எதிரானவன் என்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால் என்னைப் போல பெண்களை மதிப்பவர்கள் யாரும் கிடையாது என்பதை என்னால் மிகவும் நம்பிக்கையுடன் சொல்லமுடியும். பெண்கள் பணிபுரிய கூடாது என்று நான் சொல்லவே இல்லை.

 

என்னுடைய பேச்சுகளை தவறான முறையில் திரிக்க வேண்டாம் என்று என்னுடைய நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீ டூ விவகாரம் - அர்ஜுன் மீது புகார் கொடுத்த நடிகைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

arjun mee too case update

 

கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் மீது மீ டூ இயக்கத்தில் புகார் அளித்திருந்தார். அதில், நிபுணன் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நிலையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

 

இது தென்னிந்திய திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கப்பன் பார்க் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன் பேரில் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை மறுத்த அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

 

இதையடுத்து, கப்பன் பார்க் காவல் துறையினர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் மீது 3 ஆண்டுகள் விசாரணை நடத்தி 2021 ஆம் ஆண்டு நவம்பரில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி இவ்வழக்கிலிருந்து அர்ஜுன் விடுவிக்கப்பட்டார். பின்பு நீதிமன்றத்தின் உத்தரவை ஸ்ருதி ஹரிஹரன் எதிர்த்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள 8வது கூடுதல் தலைமை நீதிமன்றம் நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 


 

Next Story

"உடல் ரீதியாக மட்டுமல்ல..." - ‘மீ டூ’ குறித்து சாய் பல்லவி

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

sai pallavi about mee too

 

சாய் பல்லவி கடைசியாக 'கார்கி' படத்தில் நடித்திருந்தார். பாலியல் குற்றத்தைப் பற்றி பேசியிருக்கும் இப்படம் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

 

ad

 

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தனது சினிமா அனுபவங்களைப் பற்றி பேசிய சாய் பல்லவி மீ டூ முன்னெடுப்பு குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் "உடல் ரீதியாக மட்டுமல்ல வார்த்தைகளால் திட்டி ஒருவரை அசௌகரியமாக உணர வைப்பதும் ஒரு வகையான துன்புறுத்தல் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆவணம் செய்ய எளிதாக இருக்கும் வழிதான் மீ டு. இதன் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பொது வெளியில் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.