cssavaz

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

Advertisment

fbsfsdbs

மேலும் சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்து வரும் நிலையில் 'குக் வித் கோமாளி 2' மூலம் மீண்டும் புகழடைந்த நடிகை ஷகிலா தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாகச் சாலையோரம் வசிக்கும் உணவின்றி தவித்த ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது.. “உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார், ஷகிலாவின் இந்த உதவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment