Advertisment

‘சாதி பெருமை பேசுகிறார்’ - திவாகர் மீது சகீலா புகார்

94

சமூக வலைதளங்களில் கஜினி படத்தில் இடம்பெற்ற வாட்டர்மெலன் காட்சியை ரீல்ஸ் செய்து கவனம் பெற்றவர் திவாகர். இவர் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என தன்னை தானே அடையாளப்படுத்திக் கொண்டு வீடியோ வெளியிட்டு வருகிறார். மேலும் பிசியோதெரபி மருத்துவராக இருந்ததாகவும் சொல்கிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் வீடியோவை ட்ரோல் மெட்டிரியலாகவே பார்க்கப்படுகிறது. 

Advertisment

இவர் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார். குறிப்பாக ஒரு நேர்காணலில் நடிகர் சூரியை பற்றி இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்தது கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இது தொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் சரமாரியாகக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இப்படி தொடர்ந்து பல நேர்காணல்களில் இவர் பேசும் விஷயங்கள் விளம்பரத்திற்காக செய்து வருவதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் கவின் ஆணவக்கொலை சம்பந்தமாக கவினை வெட்டிய சுர்ஜித்தை தன் சாதி என்றும் சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டால் இது போன்ற கொலைகள் நடக்காது என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். அது இவர் மீது இன்னும் கொதிநிலையை பலரிடம் உருவாக்கியது. 

இந்த நிலையில் திவாகர் மீது நடிகை சகிலா புகார் தெரிவித்துள்ளார். புகாரில், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் திவாகர் பேட்டி அளித்து வருவதாக சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சகிலா, “அவர் அவரையே புகழ்ந்து கொள்கிறார், அதில் எனக்கு பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் சமீபமாக சாதிக் குறித்து தவறாக பேசுகிறார். அது சமூகத்துக்கு நல்லது இல்லை. கவின் ஆணவக் கொலையில் கூட கொலை செய்தவர் எங்க சாதி என சொல்கிறார். அது ரொம்ப தப்பு. அப்படி சொல்வதன் மூலம் அவர் சாதியினரை கொலை செய்ய தூண்டிவிடுவதாக நான் பார்க்கிறேன்.

அவர் பேட்டி கொடுத்தாலும் அதுவும் வியூஸ் போகிறது. அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர் மீது யாராவது கைது நடவடிக்கை எடுக்க கோரி முன் வரவேண்டும். அவரைப் பற்றி பேசிக் கொண்டே வருவதால் அவர் இன்னும் வீடியோ போட்டுக் கொண்டு தான் இருக்கிறார். இப்போது கூட இரண்டு மணிநேரத்துக்கு முன்னாடி ஒரு வீடியோ போட்டிருக்கார். அவர் சாதிப் பற்றி பேசியது எனக்கு வலித்தது. அதனால் அவருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். எதோ ஒரு வகையில் இவர் மாதிரியான ஆட்களின் வீடியோ ரசிக்கப்படுவதால் அவர்கள் வளர்ந்துவிடுகிறார்கள். வளர்ந்த பிறகு, என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார்கள். அது தடுக்கப்பட வேண்டும்” என்றார்.   

instagram Shakeela,
இதையும் படியுங்கள்
Subscribe