
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ள நிலையில் பொழுதுபோக்கு இடங்களுக்குச் சிறிது காலம் வரை அனுமதி வழங்கப்படாது என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இதனால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்பட்டு, படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் முடித்துவைக்கப்பட்ட படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகின்றனர். பெரிய மார்க்கெட் உள்ள திரைப்படங்கள் திரையரங்கில்தான் வெளியிடுவோம் என்று காத்திருக்கின்றனர்.
அந்தவகையில், அடுத்ததாக கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.