Skip to main content

தொடர் தோல்வி எதிரொலி..! தனுஷ் படத்தில் நடிக்கும் ஷாருக்கான்..!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான 'அசுரன்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியார் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தியிருப்பார்கள்.

 

asu

 

 

மேலும் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு, சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதேபோல் ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். சமீபத்தில் 'அசுரன்' படம் பார்த்து வியந்த நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் நடித்த படங்கள் வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அவர் தமிழ் படத்தை ரீமேக் செய்ய கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அசுரன் தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

asuran

 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'அசுரன்'. தமிழில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்தனர். தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க, மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்தார். இப்படத்திற்கு தெலுங்கில் 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டது.

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாரான வேளையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், 'நாராப்பா' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த தயாரிப்பு தரப்பு, சில முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், அமேசான் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து, நாராப்பா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாராப்பா திரைப்படம் அமேசான் தளத்தில் வரும் ஜூலை 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாராப்பா ரிலீஸ் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு இரு தமிழ்ப்படங்கள் தேர்வு!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

golden globe

 

ஆஸ்கார் விருதிற்கு அடுத்தபடியாக, உலகத் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படக்கூடிய மற்றும் கௌரவமாகக் கருதக்கூடிய விருது கோல்டன் குளோப் விருது ஆகும். இவ்விருது விழாவானது வருடந்தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். ஆங்கில படங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பிற மொழிப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இதில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வருடம் ஃபிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 78-வது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு, இரு தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளன.

 

அவை, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் ஆகும். இதனையடுத்து, உற்சாகமான இவ்விரு நடிகர்களின் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமுக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.   

 

உலகம் முழுவதிலும் இருந்து வந்த 127 படங்களில் இருந்து 50 திரைப்படங்களை நடுவர்கள் குழு திரையிடுதலுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்கள் மட்டுமே இவ்விருதுவிழாவில் பங்கேற்க முடியும் என்ற விதியானது, கரோனா நெருக்கடி நிலை காரணமாக, ஓடிடி-யில் வெளியாகும் படங்களும் பங்கேற்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.