விஜய்யை வைத்து தொடர் ஹிட்படங்களைகொடுத்த அட்லீ தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் திரையுலகில்30 வருடங்களைநிறைவு செய்துள்ளார். இதனையொட்டிசமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய ஷாருக்கான் அவர்களின் பல கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் அட்லீ குறித்தும்ஜவான் படம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஷாருக்கான்,“அட்லீக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. அட்லீயின் படங்கள் மாஸ் கமர்ஷியல் என்டர்டைமென்டாகஇருக்கும். நான் இந்த மாதிரி படத்தில் இது வரை நடித்ததில்லை, அதனால்தான் ஜவான் படத்தில் நடித்துள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படம் முழுமையாக முடியாததால் வேறு ஏதும் சொல்ல முடியாது” என பதிலளித்தார்.