shahrukh khan started srk plus ott platform

Advertisment

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் இந்தியா முழுவதும் கணிசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார். இவர்தற்போது இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஷாருக்கான் நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகதிறமை கொண்டவராகவும் திகழ்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில், புதிதாக ஓடிடி தளம் தொடங்கவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தங்களது படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். தெலுங்கு முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தின் பெயரில் ஆஹா என்ற ஓடிடி தளத்தைநடத்தி வரும் நிலையில், தற்போது ஷாருக்கானும்ஓடிடி தளம் ஒன்றை தொடக்கவுள்ளார். ஷாருக்கானின் இந்த முயற்சிக்கு அனுராக் காசிப், சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.