Advertisment

சர்ச்சைக்கு மத்தியில் உலகளாவிய அங்கீகாரம் - மாஸ் காட்டும் ஷாருக்கான்

shahrukh khan is the only indian actor in empire 50 Greatest Actors Of All Time List

Advertisment

பிரபல மாத இதழான ‘எம்பயர்’சர்வதேச அளவில் அனைத்துக் காலங்களிலும் சிறந்து விளங்கும் 50 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மர்லின் மன்றோ, மார்லன் பிராண்டோ, டாம் குரூஸ், கேட் வின்ஸ்லெட், ஹீத் லெட்ஜர், லியனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஷாருக்கான் நடித்த தேவதாஸ், மை நேம் இஸ் கான், குச் குச் ஹோதா ஹை, ஸ்வேட்ஸ் உள்ளிட்ட படங்களை எம்பயர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நான்கு தசாப்தங்களாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதாகவும் கிட்டத்தட்ட அனைத்து ஜானரிலும் பொருத்தமான நடிப்பைக் கொடுக்கக்கூடியவர் எனவும் புகழ்ந்துள்ளது.

ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள 'பதான்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் அதில் காவி உடையைத்தவறாக சித்தரித்துள்ளதாக பா.ஜ.க மற்றும் வலது சாரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe