பதான், பன்கி, உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஷாருக்கான் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்திலும்நடித்து வருகிறார். சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஷாருக்கானுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரைபோன்றேநடிகை கத்ரீனா கைஃபுக்கும்கரோனாஉறுதி செய்யப்பட்டநிலையில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பிறந்தநாள் நாள் நிகழ்வு மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப், சல்மான்கான், அமீர்கான், சாயிஃப் அலிகான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 120 க்கு மேற்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களில் 55 நடிகர், நடிகைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் யாரும் இதைவெளியே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.குறைந்த வந்த கரோனாபாதிப்பு வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் இது போன்ற அதிக நபர்கள் கூடும் விருந்து நிகழ்ச்சிகளைநடத்த வேண்டாம் எனமும்பை கார்ப்பரேஷன் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.