உதட்டை கிழித்த கிரிக்கெட் பால்... 13 தையல் போட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர்...

தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களில் ஒன்று ஜெர்ஸி. இப்படத்தில் ஹீரோவாக நானியும், ஹீரோயினாக ஷரத்தா ஸ்ரீநாத்தும் நடித்தனர். கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று நினைத்துகொண்டு வாழும் இளைஞன் ஒருவரின் வாழ்க்கை திருமணம் நடைபெற்றவுடன் அந்த கிரிக்கெட்டையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். மீண்டும் தன்னுடைய மகனின் ஆசைக்காக கிரிக்கெட்டில் கலந்துகொள்கிறார். அவர் சாதித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

shahid kapoor

இந்த வெற்றி படத்தை பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பாலிவுட்டில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக்காவது உறுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது பாலிவுட்டில் படபிடிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஷாகித் கபூர் உடற்பயிற்சி மேற்கொண்டு, கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டார். இந்த படத்தின் ஷூட்டிங் மோகாலியில் நடைபெற்றபோது கிரிக்கெட் பந்து ஷாகித்தின் உதட்டை கிழித்து, 13 தையல் உதட்டில் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வருடம் ஷாகித் நடிப்பில் கபீர் சிங் படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இந்த படம் 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும்.

shahid kapoor
இதையும் படியுங்கள்
Subscribe