பாலிவுட்டில் மூன்று கான் நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான் ஆகிய மூவரும் ஒரு படத்தில் இதுவரை இணைந்து நடித்ததில்லை. ஆனால் மூவரும் இணைந்து நடித்து விருப்பப்படுவதாக சமீபத்தில் ஆமிர்கான் ஒரு திரைப்பட விழாவில் கூறியிருந்தார். மேலும் ஆறு மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக இருந்த போது, பேசினோம் என்றிருந்தார். 

Advertisment

இந்த நிலையில் மூன்று பேரின் கேரவன்களும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது. இதனால் மூவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாக பரவலாக கூறப்பட்டது. ஆனால் மூவரும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கியுள்ள ‘தி படா***ஸ் ஆஃப் பாலிவுட்’(The Bad***s of Bollywood) வெப் சீரிஸில் நடித்துள்ளதாக பாலிவுட் வட்டார்ங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சீரிஸின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. இதில் ரன்வீர் சிங், பாபி தியோல், கரண் ஜோகர் என பல்வேறு பாலிவுட் முன்னணி பிரபலங்கள் தோன்றியிருந்தனர். மேலும் சல்மான் கானும் தோன்றியிருந்தார். இவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் ஷாருக்கான் படக் கதையை விவரிக்கும் நரேட்டராக பணியாற்றியுள்ளார். இவரது குரலின் பின்னணியில் ட்ரெய்லர் அமைந்திருந்தது. அதனால் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டு கான்கள் இணைந்திருப்பது உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது ஆமிர் கானும் கேமியோ ரோலில் படத்தில் வருவதாக கூறப்படுகிறது. 
இந்த தகவலும் வெளியான படப்பிடிப்பு வீடியோவும் பாலிவுட் வட்டாரத்தில் சீரிஸ்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சீரிஸ் வருகின்ற 18ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.