பிரதமர் மோடி தனது 72 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், உலகத்தலைவர்கள், திரை பிரபலங்கள்என பல்வேறு தரப்பினரும், தொலைபேசி, சமூக வலைத்தளம் மூலம்தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நமது நாட்டு மக்களின் நலனுக்கானஉங்களின்அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் எல்லா இலக்குகளையும் அடைய உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் இருக்கட்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.