Shah Rukh Khan to US for medical treatment

உலகளவில் ரசிகர்களை வைத்திருக்கும் ஷாருக்கான், கடைசியாக டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சுஜாய் கோஷ் இயக்கத்தில் கிங் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஷாருக்கானே தயாரிக்க படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே கடந்த மே மாதம் வெப்ப வாதத்தால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்பு முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று (29.07.2024) கண் சிகிச்சை தொடர்பாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை பலனிக்கவில்லை எனத்தற்போது கூறப்படுகிறது.

Advertisment

இதனால் சிகிச்சைக்காக தற்போது அமெரிக்க செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைந்து பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 7ஆம் தேதியில் தொடங்கும் ஸ்விட்சர்லாந்த் 77வது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.