ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'டன்கி' படத்தில் நடிக்கிறார். டாப்சி கதாநாயகியாக நடிக்கும் இப்படம் இந்தாண்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஷாருக்கான் அமெரிக்காவிற்குசென்றுள்ள நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் எதிர்பாராத விதமாக அவருக்கு அடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம். பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் இதனால் தற்போது இந்தியாவுக்கு வந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.