Advertisment

‘ஆக்சன்’ சொல்ல காத்திருக்கும் ஷாருக்கானின் மகன்

Shah Rukh Khan son Aryan Khan finished his story as a writer

இந்திய அளவில் பிரபலமாகவும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்யன் கானும் நடிகராக வருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆர்யன் கானுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை.ஆனால் இயக்கத்தில் ஆர்வமாக உள்ளார் என முன்னதாக தகவல் வெளியானது. மேலும் அதற்கான வேலையை ஆர்யன் கான் தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f1789e83-6510-408f-8b33-8d4009182f3a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_17.jpg" />

Advertisment

இந்நிலையில், ஆர்யன் கான்தனது சமூக வலைதள பக்கத்தில், "கதை எழுதி முடித்துவிட்டேன். ஆக்சன் சொல்லக் காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டு இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆர்யன் கானின் இந்தப் பதிவிற்கு ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சூப்பர்... சிந்தியுங்கள், நம்புங்கள், கனவு காணுங்கள். இவை அனைத்தும் முடிந்துவிட்டது. இப்போது தைரியமாக அதை செய்யுங்கள். உன்னுடைய முதல் ப்ராஜக்டுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். முதல் ப்ராஜெக்ட் எப்போதுமே ஸ்பெஷல்" எனப் பதிவிட்டுள்ளார். ஆர்யன் கானின் முதல் படைப்புஒரு வெப் சீரிஸாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யன் கான், கடந்த வருடம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aryan Khan sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe