Shah Rukh Khan, Rajkumar Hirani in Dunki second trailer released

Advertisment

பிரபல இந்தி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானிஇயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படம் 'டங்கி'. இதில் டாப்ஸி, போமன் இரானி மற்றும் விக்கி கௌஷல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரிக்கும் இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வரை 64 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூட்யூபில் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னோட்டத்தில், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகியோர் அடங்கியலண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைஷாருக்கான் கதாபாத்திரம் சந்திக்கிறது. பின்பு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நான்கு நண்பர்களைப் பின்தொடர்ந்து இந்தக் கதை செல்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ஒரு ட்ரைலரும் இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.