Shah Rukh Khan gives voice over to Mufasa: The Lion King

தி லயன் கிங் படங்களின் தொடர்ச்சியாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ படம் உருவாகியுள்ளது. பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் முஃபாசா கதாபாத்திரம் குறித்து விரிவாக சொல்லும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் நிலையில், ஒவ்வொரு பதிப்பிற்கும் அந்தந்த மொழியின் திரை பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். அந்த வகையில் தமிழில் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், ரோபோ சங்கர், சிங்கம் புலி, நாசர், விடிவி கணேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் இந்தி பதிப்பில் ஷாருக்கான் குரல் கொடுத்துள்ளார். அவர் முஃபாசா கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது.