Advertisment

கொலை மிரட்டல் - ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு

Shah Rukh Khan Gets Y+ Security Cover

Advertisment

கடந்த 4 ஆண்டுகளில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து ஒரு படமும் வெளியாகவில்லை. அதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில்,நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு தொடக்கத்தில் பதான் படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதையடுத்து சமீபத்தில் வெளியான ஜவான் படம் உலகம் முழுவதும் ரூ.1103 கோடி வசூலித்துள்ளதாக கடந்த 6ஆம் தேதி படக்குழு அறிவித்தது. ஒரே ஆண்டில் வசூல் ரீதியாக இரண்டு மெகா வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் ஷாருக்கான்.

இந்த இரண்டு பட வெற்றிகளால் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக மகாராஷ்டிரா காவல் துறையினருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனால், இதுவரை ஷாருக்கானுக்கு 2 போலீஸார் மட்டுமே பாதுகாப்பு கொடுத்து வந்த நிலையில், தற்போது ஒய் பிளஸ் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 24 மணி நேரமும் ஷாருக்கானுடன் ஆயுதமேந்திய 6 போலீஸார் உடன் இருப்பார்கள்.

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe