60 வயது மூதாட்டியின் ஆசை - உடனடியாக நிறைவேற்றிய ஷாருக்கான்

Shah Rukh Khan fulfills 60-year-old cancer patient desire

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டிஷிவானி சக்ரபோர்த்தி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர்ஷாருக்கானின் தீவிர ரசிகர். அவரைஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்பதை வாழ்நாள் ஆசையில் ஒன்றாகவைத்துள்ளார்.

இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகபரவ, ஷாருக்கான் காதுக்கும் இத்தகவல் சென்றுள்ளது. உடனடியாக அந்த மூதாட்டிக்கு வீடியோ கால் மூலமாக சர்ப்ரைஸ் செய்து அவரின் வாழ்நாள் ஆசையைநிறைவேற்றி உள்ளார் ஷாருக்கான். அப்போது, அப்பாட்டியின்மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். அவருடன்40 நிமிடம் பேசியுள்ள ஷாருக்கான் அவரைநேரில் வந்து பார்ப்பதாகவும் கூறினார். ஷாருக்கானின் இந்த செயல் பலரதுபாராட்டைப் பெற்றுள்ளது.

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இப்படம் செப்டம்பர் 7ஆம்தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'டன்கி' படத்தில் நடிக்கிறார்.

sharukh khan
இதையும் படியுங்கள்
Subscribe