/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Es1Q5DFVEAIFFlY.jpg)
ஆனந்த் பால்கி இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்வர் சுந்தரம்'. இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டே நிறைவடைந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இந்த நிலையில், 'சர்வர் சுந்தரம்' படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு 'சர்வர் சுந்தரம்' படம் வெளியாக இருப்பது சந்தானம் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)