serial actress vaishali takkar case update

Advertisment

இந்தியில் சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி 2 உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமடைந்தவர் வைஷாலி டக்கர். இதில் சசுரால் சிமர் கா தொடர் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. கடந்த 16ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம்இந்தூரில்வைஷாலி டக்கர் தனது அறையில் தூக்கில் தொங்கிய படிமீட்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை மேற்கொண்டனர் போலீசார்.

அப்போது வைஷாலி டக்கரின் அறையை சோதித்த போலீசார் அங்கிருந்து ஒரு 5 பக்ககடிதத்தை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், "ராகுல் நவ்லானி தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். ராகுல் தன்னை டார்ச்சர் செய்வது அனைத்தும் அவரது மனைவி திஷாவுக்கு தெரியும். ஆனால் தன் கணவனை காப்பாற்றுவதற்காக பொதுவெளியில் என்னை அசிங்கமாக ராகுலின் மனைவி திட்டினார். இதை சாதகமாக்கி தன்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்திருந்த ராகுல் என் வாழ்க்கையை சிதைத்தார். தயவு செய்து ராகுலையும் அவரது குடும்பத்தினரையும் தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் எனது ஆத்மா சாந்தி அடையாது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராகுல் அவரது கல்யாணத்திற்கு முன் வைஷாலியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ராகுலின் தந்தையும் வைஷாலியின் தந்தையும் இணைந்து வியாபாரம் செய்து வருவதால் இரு குடும்பங்களும் நல்ல உறவுடன் பழகி வந்துள்ளனர். இருவரின் வீடும் தனித்தனியே அருகில் இருந்துள்ள நிலையில் ராகுல் மற்றும் வைஷாலியும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் சில காரணங்களால் ராகுல் வைஷாலியை விட்டு விலகிதிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் தனது முன்னாள் காதலியான வைஷாலியை மனரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

Advertisment

இதனிடையே வைஷாலிக்கு அவரது பெற்றோர் திருமண முயற்சிகளை மேற்கொண்ட போது, தன்னுடனான தொடர்பு பற்றி கூறியும்வைஷாலியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியும் திருமணத்துக்குத் தடையாக இருந்துள்ளார் ராகுல். இதனைத் தொடர்ந்து ராகுல் மற்றும் அவரது மனைவி திஷா ஆகியோரின் மீது தற்கொலைக்குத் தூண்டியுள்ளதாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்பு தலைமறைவாக இருந்த ராகுலை இந்தூரில் போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி இன்னும் தலைமறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் மல்கானி என்பவர் நடிகையின்தற்கொலைக்கான காரணத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ராகுல்வைஷாலியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டியுள்ளார். அதே போல் வைஷாலி யாரை திருமணம் செய்து கொண்டாலும் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அவரிடம் காட்டுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் வைஷாலியை எங்கேயும் வெளியே செல்லவிடாமல் ராகுல் சித்ரவதை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்குள்ளான வைஷாலி தற்கொலை செய்து கொண்டார்" என நிஷாந்த் சிங் மல்கானி தெரிவித்துள்ளார்.