Advertisment

"குரலற்றவர்களுக்கு எனது குரலைப் பயன்படுத்த விரும்பினேன்" - விவாகரத்தைக் கொண்டாடிய நடிகை பதிவு

serial actress shalini celebrates his divorced

Advertisment

தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்தார். பின்பு ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினியை போல் ரியாஸும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்எனச் சொல்லப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

பின்னர் ரியாஸ் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஷாலினி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல பெண்களுடன் ரியாஸுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி விவாகரத்துக்கு மனுத்தாக்கல் செய்தார். இதில் ஷாலினிக்கு விவாகரத்து அளித்தது நீதிமன்றம். இதனை சந்தோஷமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி மகிழ்ந்துள்ளார் நடிகை ஷாலினி. அதில் தனது கணவர் புகைப்படத்தை கிழிப்பது போல இருந்தது. மற்றொரு புகைப்படத்தில் எனக்கு 99 பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் கணவர் இல்லை என எழுதிய பலகை ஒன்றை ஒரு கையில் பிடித்தும் மறு கையில் பீர் பாட்டில் ஒன்றை பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். அதனை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர, அந்த புகைப்படங்கள்வைரலாகப் பரவியது.

இந்த நிலையில் அந்த ஃபோட்டோ ஷூட் குறித்து தற்போது நடிகை ஷாலினி விளக்கமளித்துள்ளார். அந்தப் பதிவில், "இந்த புகைப்படங்கள் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டவை அல்ல;மாறாக இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கும் மற்ற பெண்களுக்கு செய்தி அனுப்புவதற்காக எடுக்கப்பட்டது. குரலற்றதாக உணரக்கூடியவர்களுக்கு அதிகாரம் அளிக்க எனது குரலைப் பயன்படுத்த விரும்பினேன். எனது செயல்களை சிலர் விமர்சித்திருந்தாலும், சிலர் நான் எதிர்கொண்ட போராட்டங்களையும் சவால்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். எனது கதையைப் பகிர்வதன் மூலம்இதுபோன்ற சூழ்நிலைகளை அனுபவிக்கும் மற்ற பெண்களுக்கு என்னால் உதவ முடியும் என்பது எனது நம்பிக்கை" எனப் பதிவிட்டுள்ளார்.

Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe