Published on 06/08/2020 | Edited on 06/08/2020

‘முஜ்ஷே ஷாதி கரோகி வின்னர்’ என்னும் டிவி நாடகத்தின் மூலம் பிரபலமான டிவி நடிகை ஆன்சல் குரானா. அண்மையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிடுகையில், “நின்று கொண்டிருக்கும் என் கார் மீது ஒருவர் தனது காரால் மோதி விட்டார், உள்ளே நான் இருந்ததை கூட அவர் கவனிக்கவில்லை. இனி குறைந்தது 15 நாட்களுக்கு நடப்பது சிரமம், பரவாயில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு அழகான குடும்பம், நண்பர்கள் நீங்கள் எல்லாம் என்னை ஆதரிக்க இருப்பதனால் எனக்கு கவலையில்லை. நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன் மீது காரை ஏற்றியவரையும் மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.