serial actress divya shridhar has accussed her husband actor arnav

சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். கடந்த 2017-ம் ஆண்டு திவ்யாவும் அதே சீரியலில் நடிக்கும் அர்னவ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்பு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பிறகு திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலன் அர்னவை எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் திவ்யா, தான் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நானும் அர்னவும் 2017ஆம் ஆண்டு ஒரே சீரியலில் நடித்தோம். அப்போது நட்பாக இருவரும் பழகி வந்தோம். கடந்த 5 வருடமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தோம். என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென கல்யாணம் முடிந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என கூறுகிறார்கள். ஆனால் அர்னவ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பலரும் என்னிடம் சொன்னார்கள். அதனால் நான் பயத்தில் திருமணமான புகைப்படம், வீடியோ அனைத்தையும் வெளியிட்டேன்.

Advertisment

அதன் பிறகு அந்த புகைப்படம் அனைத்தையும் நீக்க சொல்லி அர்னவ் அப்பா உள்ளிட்ட சிலர் என்னை மிரட்டினார்கள். ஆனால் நான் நீக்கவில்லை. அவர்கள் இந்த திருமணம் புகைப்படம் விளம்பர படத்தின்போது எடுத்ததாக தெரிவித்தனர். சமீபத்தில் நான் கர்ப்பமானதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன். இதன் பிறகு ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பித்தார்கள்." என கண்ணீருடன் பேசியுள்ளார். மேலும் "கணவர் தன்னை அடித்ததில் தனக்கு வயிற்றில் அடிபட்டதாகவும், பின்னர் காலால் மிதித்ததில் மயக்கம் அடைந்துவிட்டதாக கூறினார். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் கண்விழித்துப் பார்த்தபோது தனது கணவர் அங்கே இல்லை என்றும் பின்னர் வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாக கூறியுள்ளார். கணவர் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

திவ்யாவின் வீடியோ தொடர்பாக திருவேற்காடு போலீசார் மருத்துவமனைக்கு சென்று திவ்யாவிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே திவ்யா சொல்வதில் எந்த வித உண்மையும் இல்லை என அர்னவ் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment