Advertisment

பிரபல தமிழ்த்தொலைக்காட்சி நடிகர் மரணம்... அதிர்ச்சியில் சின்னத்திரை!

venkatesh

Advertisment

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நடிகர் நெப்போலியனின் உறவினரான இவருக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர், பீட்சா, சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

வெங்கடேஷின் திடீர் மரணம் சின்னத்திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வெங்கடேஷ் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

vijay tv
இதையும் படியுங்கள்
Subscribe