serial actor hariharan passed away

Advertisment

தொலைக்காட்சி தொடர்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இளம் நடிகர் ஹரிஹரன் என்பவர் காலமாகியுள்ளார். அவரது வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கானா பாடகராகவும், பாடலுக்கு வரிகள் எழுதுபவராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

24 வயதே ஆன ஹரிஹரன் நேற்று மாலை 4 மணியளவில் மறைந்துள்ளார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியைஅளித்த நிலையில் ரசிகர்களும் சின்ன திரை பிரபலங்களும் ஹரிஹரனின் மறைவுக்கு தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி தொடரில் ஹரிஹரனுடன் இணைந்து நடித்த ராகவேந்திரன் புலி தனது சமூக வலைதள பக்கத்தில், "தற்கொலை என்பது ஒரு தீர்வாகாது. ரத்தம் சிந்திய நான் உனக்கு எத்தனை முறை அறிவுரை கூறியிருப்பேன். நீ என்னை ஏமாற்றி விட்டாய். மனசு ஏத்துக்கல..." என தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.