serial actor arnav issue divya press meet

சின்னத்திரைதொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். கடந்த 2017ம் ஆண்டு முதல் உடன்நடித்த சீரில் நடிகர் அர்னவை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளனர். பிறகு திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலன் அர்னவை சில மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, "தான் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாக கூறினார். கணவர் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதனையடுத்து அர்னவ், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அர்னவ், "தான் திவ்யாவை அடித்து துன்புறுத்தவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக இருக்கின்றது. தன்னுடைய குழந்தையை கருக்கலைப்பு செய்யும் எண்ணத்துடன் திவ்யா செயல்படுகிறார். இதற்கு பின்னால் ஆர்ட்டிஸ்ட் ஈஸ்வரன் என்ற நபர் இருக்கிறார். திவ்யாவிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருப்பது தெரியும். ஆனால் அவர் ஒரு குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருவார் நான் பார்த்திருக்கிறேன். யார் குழந்தை என கேட்ட போது தன் அக்கா குழுந்தை என சொன்னார். அது பொய் என்று இப்போதுதான் தெரியவந்தது." என பேசியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் திவ்யா சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அர்னவ் மீது புகாரளித்துளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் திவ்யா பேசினார். அப்போது கூறுகையில், "இந்து மதத்திலிருந்துமதம் மாறினால் திருமணம் செய்துகொள்ளலாம் என அர்னவ் சொன்னார். அவர் மேல் உள்ள அன்பினால் அர்னவ் மட்டும் போதும் என்று நினைத்து மதம் மாறினேன். பின்பு என் ஆசைப்படி காஞ்சிபுரத்தில் இந்து முறைபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதன் பிறகு ஜூன் 29ஆம் தேதி முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தோம். அதே நாளில் பதிவு திருமணமும் செய்து கொண்டோம். பின்பு நான் கர்ப்பமானதில்இருந்ததுஎன்னை தவிர்க்க ஆரம்பித்தார். அர்னவ், அவருடன் சீரியலில் நடித்து வரும் ஒரு நடிகையுடன் நெருங்கி பழகி வருவதாக எனக்கு தெரியவந்தது. நான் ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்க்கு போனேன். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்தனர். பின்பு அவர்களிடம் கேட்டபோது நடிகை அன்ஷித்தா என் வயிற்றில் தண்ணீர் பாட்டில் மூலம் அடித்தார்.

அதன் பிறகு எங்களுடைய திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டேன். உடனே அதனை நீக்க சொல்லி அர்னவ் உடன்பிறந்தவர்கள் என்னை டார்ச்சர் செய்தனர். நான் அனைத்தையும் நீக்கினேன், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஒரு வீடியோ மட்டும் நீக்கவில்லை. இதன் காரணமாக நீ வீடியோவை நீக்க வில்லை, நான் விவாகரத்து செய்து விடுகிறேன் என அர்னவ் சொன்னார். பின்பு அந்த வீடியோவையும் நீக்கிவிட்டேன். அடுத்த நாள் அர்னவ் இந்த புகைப்படங்களை பகிர்ந்து இது வெறும் விளம்பர படம் மட்டும் தான், இது நிஜ திருமணம் கிடையாது என குறிப்பிட்டிருந்தார். பின்பு அந்த நடிகை என்னிடம், 'நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன் நீ என்ன இங்க பண்ற' என பேசி ஒரு ஆடியோ அனுப்பியிருந்தார். அவளும் ஒரு முஸ்லீம் தான், என் முன்னிலையில் தொலைபேசியில் அசிங்க அசிங்கமாக பேசினார், அர்னவிடம் என் முன்னாள்ப்ரொபோஸ் செய்து முத்தம் கொடுக்கிறார். இதற்கு அர்னவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கு எல்லாம் அந்த நடிகை தான் காரணம்" என குற்றம் சாட்டியுள்ளார்.