Advertisment

உருவாகும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பாகம்

the sequel of silk smitha biography the dirty picture is geting ready

தமிழ் சினிமாவில் சிலரின் பெயர்கள் மட்டும் தான் அவர்கள் மறைந்த பிறகும் காலத்தை தாண்டி கொண்டாடப்படும் வகையில் அமைந்திருக்கும். அந்த வரிசையில் ஒன்றாக சில்க் ஸ்மிதா பெயரும் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ஏனென்றால் 80 மற்றும் 90-களின் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல மொழிகளில் எக்கச்சக்க பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இவரது வாழ்க்கையைத்தழுவி இந்தியில் ’தி டர்டி பிக்சர்’ படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் வசூல் ரீதியா நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைத் தயாரித்த ஏக்தா கபூர் இப்படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Bollywood silksmitha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe