தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்தவர் நடிகர் செந்தில். கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடித்த படங்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், நடிகர் செந்தில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனைக் கைதியாக நடித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கரோனா இரண்டாம் பரவலுக்கு இடையே நிறைவடைந்தது. இதையடுத்து இதன் பின்னணி வேலைகள் ஆரம்பமான நிலையில், தற்போது இப்படத்தில் தன்னுடைய டப்பிங் பணிகளை நடிகர் செந்தில் முடித்துள்ளார். சூப்பர் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், விரைவில் வெளியாகவுள்ளது.