இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில் வி. தியாகராஜன் ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.திரைப்படத் தயாரிப்பில் பல சாதனைகளை செய்துவரும்இவர், சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்துவருகிறார். இதனால் கடந்த 18ஆம் தேதி புவனேஸ்வரில் நடைபெற்ற தேர்தலில் இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராகஉறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் தலைவராக ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்துபிரபலமான நடிகர் ராகுல் போஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூடைப்பந்து, ரக்பி, டிராக் மற்றும் ஃபீல்ட்ஆகிய விளையாட்டுகளில்சிறந்து விளங்கிய தயாரிப்பாளர் செந்தில் வி. தியாகராஜன், சர்வதேச ரக்பி போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.இவர் தற்போதுதமிழ்நாடு ரக்பியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் மூத்த துணைத் தலைவராகவும் உள்ளார்.