Skip to main content

"நான் 10 வருஷத்துல பண்ண நினைச்சதை 10 நாளில் சிம்பு பண்ணிவிட்டார்" - சென்ராயன்

 

Sendrayan about simbu

 

கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 

 

இப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக நடிகர் சென்ராயன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "சிம்பு சாருடன் 3 படங்கள் பணியாற்றியுள்ளேன். பத்து தல நான்காவது படம். இதில் வித்தியாசமாக நடித்துள்ளேன். காமெடி கதாபாத்திரம் தான் ஆனால் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

நான் 10 வருடமா உடலை ஏற்ற வேண்டுமென்று ட்ரை பண்ணிட்டு வருகிறேன். ஆனால் சிம்பு 10 நாளில் உடல் எடையை கூட்டியும் இருக்கிறார். குறைத்தும் இருக்கிறார். அதற்கு மிகப் பெரிய திறமை வேணும். அவருடைய அர்ப்பணிப்பை பார்த்து வியக்கிறேன். ஆண்டவன் அருள் இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும். அது சிம்புவுக்கு இருக்கு" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்