/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/selva_3.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகஇருக்கும் செல்வராகவன், 'சாணிக்காயிதம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன்இயக்கிவருகிறார். இதில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 'சாணிக்காயிதம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடிடியில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us