Advertisment

"நம் கதவும் திறக்கும்" - செல்வராகவன் நம்பிக்கை

selvaraghavan tweet

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பின்பு 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்து தனக்கென்ன ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் செல்வராகவன். இயக்குநராக அறிமுகமானாலும் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனுஷின் 'நானே வருவேன்' படத்தில் இயக்கி நடித்துள்ளார். பின்பு மோகன்.ஜி இயக்கும் 'பகாசூரன்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் செல்வராகவன் அடிக்கடி நம்பிக்கையூட்டும் கருத்துகளை பதிவிட்டு வருவார்.

Advertisment

அந்த வகையில் தற்போது ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நாம் செய்ய நினைப்பதை இன்னொருவர் செய்யலாம். நம் கனவை இன்னொருவர் வாழலாம். அதைப் பார்த்து பொறாமைப் பட்டு ஏக்கத்திலேயே காலம் தள்ளக்கூடாது. நம் கையில் இருப்பது ஊசியில் நூல் கோர்க்கும் வேலை என்றாலும் மனம் ஒன்றி திறம்பட செய்வோம். வெகு விரைவில் நம் கதவும் திறக்கும்." என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe