selvaraghavan tweet about his life experience

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'நானே வருவேன்' படத்தை இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையேசந்தித்தது. இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் மோகன்.ஜி இயக்கும் 'பகாசூரன்' படத்தில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்து பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்துவிட்டு கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

2023ஆம் ஆண்டு புத்தாண்டை அனைவரும் வரவேற்க தயாராகி வரும் நிலையில் செல்வராகவன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளதுபலரதுகவனத்தை ஈர்த்துள்ளது.