
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'நானே வருவேன்' படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'பகாசூரன்' சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்து பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது நண்பர்கள் குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,😥😥😥 pic.twitter.com/k9MM8vCGSK— selvaraghavan (@selvaraghavan) March 1, 2023