/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/149_11.jpg)
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது 'பகாசூரன்' படத்தை இயக்கியுள்ளார். 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் 'பகாசூரன்' டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் யூ-ட்யூபில் தற்போது வரை 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த டீசரில் இளம் தலைமுறையினர் வீடியோ கால் மூலம் செய்யும் தவறுகளையும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளையும் விரிவாக பேசுவது போல் அமைந்துள்ளது. அதோடு செல்வராகவன் பேசும் 'முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும்' வசனம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)