'ஃபர்ஹானா' - ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த செல்வராகவன்

 Selvaraghavan plays a important role in Aishwarya Rajesh Farhana

காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் மோகன் தாஸ், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் டிரைவர் ஜமுனா மற்றும் சொப்பன சுந்தரி ஆகிய படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் டிரைவர் ஜமுனா வரும் நவம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் 'ஃபர்ஹானா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

aishwarya rajesh selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe