Advertisment

நடிக்க குவியும் வாய்ப்புகள்... வில்லன் கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன செல்வராகவன்

Selvaraghavan play antagonist Nelson Venkatesan next film

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில்இயக்குநர்அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணிக்காயிதம்' படத்தில் நடித்துமுடித்துள்ள செல்வராகவன் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே செல்வராகவன் இயக்குநர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாகநடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர்ஆகிய படங்களைஇயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கவுள்ள இப்படத்தில்இயக்குநர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகநடிக்கவுள்ளார்.

Advertisment

இயக்குநர்செல்வராகவன் தற்போது தனுஷ் நடிப்பில் தயாராகும் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

saanikaayidham Beast selvaraghavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe