/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/selva-rahavan.jpg)
காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் செல்வராகவன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்கள் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.
இந்த நிலையில், 'சாணிக் காயிதம்' என்ற படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படத்தில், செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முழுவீச்சில் நடைபெற்று வரும் முன்தயாரிப்பு பணிகள் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், பிப்ரவரியில் தொடங்கி குறுகிய காலத்தில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)